Scroller

"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய் கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய் சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ" || "முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"||

பொன்மொழியும் - விளக்கமும்


மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே
மெய்யர் நன் மக்கள் சான்றோர்...


நமக்கு நாமே உண்மையாக இருப்பதே அழகு. உண்மையில் நிலையாய் இருப்பதே உறுதி. உண்மை நிலையானது. அழியாதது. உண்மையை அறிவது ஞானம். உண்மையை நம்புவது பக்தி. உண்மையாக நடப்பதே மதம் (தர்மம்). முள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறது. அதே போலத்தான் துன்பங்கள், சூழ்ச்சிகள் நிறைந்த இந்த உலகில் அனைவரிடமும் அன்பு பாராட்டி மெய்பொருளாம் ஞானத்தை அடையவேண்டும்.


நானல்லால் நடப்பதுவும் வேறில்லை
(17-7-2013 Update)

உலகில் எத்னை கோடி அவதாரங்கள் நடந்தாலும் அத்தனையும் பரம்பொருள் ஒன்றிலிருந்து வந்த வெளிப்பாடுகளே தவிர அவை வேறு வேறானவைகள் அல்ல. இயற்கை என்ற இறை ஆற்றலே அனைத்தையும் இயக்குகின்றன. இயற்கையின் இயக்கத்திற்கு வேறாக மண்ணில் வேறு எந்த இயக்கமும் நிலை பெற்றிருப்பதில்லை. 


முக்கோடி தர்மம் உகந்தழித்த அன்போரை தக்கோடி நரகமதில் 
தள்ளவென்றால் உன் மனந்தான்
(17-12-2013 Update)

விளக்கம் :

உயர்ந்தவர்களாக வாழ்ந்தவர்களும் சில வேளைகளில் நான் என்ற 
ஆணவத்தில் அழிந்து போகிறார்கள். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாக
இருப்பதில்லை. அதுபோலவே தீயவர்களும் என்றும் தீயவர்களாகவே இருப்பதில்லை.
நல்லதும் தீயதும் தான் இந்த உலக வாழ்வு. ஒருவன் எவ்வளவு புண்ணிய 
செயல்களை செய்தாலும் மனம் தூய்மையாக இல்லாவிட்டால் அவற்றால் எந்த 
பயனும் இல்லை. எனவே எல்லாரையும் விட இறைவன் மிக பெரியவன் என்று 
யார் நினைத்து செயல் புரிகிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள்.